தென்னிந்திய வரலாறு 3 - South Indian History 3 - Chalukyas, Rashtrakudas
சாளுக்கியர்கள் (பொ.ஆ. 543 - 755)
கல்யாணிச் சாளுக்கியர்களும் வேங்கியின் கீழைச் சாளுக்கியர்களும் மேலைச்சாளுக்கியரின் வழிவந்தவர்களாவர். மேலைச் சாளுக்கிய மரபை தோற்றுவித்தவர் முதலாம் புலிகேசி. அவரது சிற்றரசின் தலைநகர் வாதாபி (தற்போது பாதாமி). சாளுக்கியர்களில் சிறந்த மன்னராக கருதப்படுபவர் இரண்டாம் புலிகேசி (பொ.ஆ.608-642) . மைசூரு கங்கர்களையும் புனவாசி கடம்பர்களையும் வென்று தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். கங்க மன்னர் துர்விநீதன் தனது மகளை இரண்டாம் புலிகேசிக்கு மணமுடித்தார். நர்மதை ஆற்றங்கரைப் போரில் தென்னிந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் படையெடுத்த ஹர்ஷரை வென்றது இரண்டாம் புலிகேசியின் சாதனையாகும். ஆனால் பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மனிடம் படுதோல்வி அடைந்தார். பின்னர் பல்லவர்களால் வாதாபி கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. சீனப்பயணி யுவான்சுவாங் (பயணிகளின் இளவரசர்) இவரது நாட்டுக்கும் விஜயம் செய்தார்.
No comments:
Post a Comment