TNPSC தேர்வர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையில் வேலை – 673 காலியிடங்கள்..

TNPSC GK Team
0

 TNPSC தேர்வர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையில் வேலை – 673 காலியிடங்கள்..

tnpsc news


TNPSC தேர்வர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையில் வேலை – 673 காலியிடங்கள்..

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 673 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது. இதனையடுத்து கடந்த வருடம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.

கலந்தாய்வு:

தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வாகியுள்ள மொத்த பணியிடங்களில் 673 இடங்கள் பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இவர்களுக்கென தனியாக கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள. அதில் 673 இளநிலை உதவியாளர் பெயர் பட்டியல் மற்றும் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.


இதனை வைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் நிர்வாக வரம்பிற்குட்பட்ட பணி நாடுநர்களின் விவரங்களை கண்டறிந்து தனிப்பட்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் செப்டம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. இந்த கலந்தாய்வு தொடர்பாக அனைத்து தேர்வர்களுக்கும் அழைப்பாணை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top