TNPSC News: நூலகர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

TNPSCGK Editorial Team
0

 

tnpsc-released-hall-ticket-for-librarian-exam

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான நேரடி நியமன கணினிவழி தேர்வு மே 13-ம் தேதி (காலை மற்றும் பிற்பகல்) நடைபெற உள்ளது.


இத்தேர்வெழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பதாரர்கள் தங்கள் ஒருமுறை பதிவின் விவரப்பக்கம் மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top