Tuesday, January 17, 2023

TNPSC Recruitment 2023: கவர்மெண்ட் வேலை! 93 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை!

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC -Tamil Nadu Public Service Commission) காலியாக உள்ள Agricultural Officer, Assistant Director of Agriculture, Horticultural Officer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மொத்தம் 93 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.01.2023 முதல் 10.02.2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 


காலி பணியிடங்கள்

மொத்தம் மூன்று துறைகளுக்கு ஆட்டகள்ஆட்கள் சேர்ப்பு நடைபெறவுள்ளது. வேளாண் அலுவலர் பதிவிக்கு 33 + 4 என 37 இடங்களும், வேளாண் உதவி இயக்குனர் பதவிக்கு 8 இடங்களும், தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 41 + 7 என 48 இடங்களுக்கும் பணியாளர்கள் நிரப்பப்படவுள்ளனர்.


மாத சம்பளம்

வேளாண் அலுவலர் பதிவிக்கு ரூ.37,700 - ரூ.1,38,500 வரையும், வேளாண் உதவி இயக்குனர் பதவிக்கு ரூ.56,100 - ரூ.2,05,700 வரையும், தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு ரூ.37,700 - ரூ.1,38,500 வரையும் மாத சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 


வயது வரம்பு


SCs, SC(A)s, STs,MBC/DCs, BC(OBCM)s,BCMs மற்றும் விதவைகளுக்கு வயது வரம்பு கிடையாது. மற்றவர்களுக்கு பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 மற்றும் 34 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment