latest group 4 results news update 2022டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் - லேட்டஸ்ட் அப்டேட்

TNPSCGK Editorial Team
0

 டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அதனை இப்போது பார்ப்போம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவிகளுக்கான தேர்வை ஜூலை 24 ஆம் தேதி நடத்தியது. 7301 பதவிகளுக்கு நடந்த இந்தத் தேர்வை 18 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். 

அப்போது தேர்வு முடிவுகள் அக்டோபர் மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

இதனிடையே, பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டு முறை தொடர்பான வழக்கின் காரணமாக குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. 

தற்போது தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, ஒரு மாதங்களுக்கு மேலாகும் நிலையில், தீர்ப்புக்கு ஏற்றவாறு தேர்வாணைய முடிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து தேர்வு முடிவுகள் தயாராக உள்ளதாக நிபுணர்களால் கூறப்படுகிறது.

இந்தநிலையில், சில தேர்வர்கள் தேர்வாணையத்தை தொடர்புகொண்டபோது குரூப் 2 தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள், அதாவது நவம்பர் 2 ஆவது வாரத்தில் வரும் என்று தெரிவித்ததாக கூறுகின்றனர். 

மேலும், ஒரே வாரத்தில் 4 தேர்வுகளுக்கான முடிவுகளை தேர்வாணையம் அறிவித்துள்ளது, எனவே விரைவில் பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படலாம் என்று தேர்வாணைய தரப்பில் கூறியதாக கூறப்படுப்படுகிறது.

இதனால், குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகளும், குரூப் 2 தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து வெளியிடப்படலாம் என சில தேர்வர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

எப்படியும், இன்னும் ஒரு வாரத்திற்குள் நிச்சயம் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகும் என நிபுணர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 


ஒருவேளை தாமதம் ஆனாலும் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தேர்வர்கள் மிகுந்த ஆவலுடன் இரண்டு தேர்வு முடிவுகளையும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top