Tuesday, January 4, 2022

தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

 தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? என்பதே சிலருக்குத் தெரியாமல் இருக்கிறது. முதலில் நீங்கள் பங்கேற்விருக்கும் தேர்வு என்ன? அதன் பாடத்திட்டம் என்னென்ன? என்பதை முழுவதுமாக அறிந்திருக்க வேண்டும். அதன் பின்பு அதற்கு தயாராக தேவையான "மெட்டீரியல்கள்" தேர்ந்தெடுக்க வேண்டும். 


how to success in exam

  • எந்த தேர்வு என்பதை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • தேர்வு அறிவித்த பின் படித்தல் கூடாது. முன்னரே துவங்க வேண்டும்.
  • தேர்வுக்கேற்றாற் போல் உங்களை தயார்படுத்த வேண்டும்.
  • தமிழா அல்லது ஆங்கலமா என்பதை சரியாக யோசித்து முடிவெடுங்கள். சில தேர்வுகளில் ஆங்கிலம் மட்டுமே.
  • தினந்தோறும் நாளிதழ் படித்தல் அவசியம். நாளிதழ் படிக்கச் சொன்னால் சினிமா செய்திகள் படிக்கக் கூடாது. அரசியல், விளையாட்டு, மக்கள் கருத்தரங்கம், நடப்புச் செய்திகள் படிக்க வேண்டும்.
  • பாடத்திட்டத்தை சரியாக புரிந்து கொண்டு படிக்க வேண்டும். 
  • நீங்கள் தேர்வுக்கு ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் நம்பாமல் தலைப்பை ஆராய்ச்சி செய்து படித்தல் நல்லது.
  • வினா விடை போல் இருக்கும் புத்தகங்களை தேர்ந்தெடுக்காமல் விரிவாக செய்தியாய் இருக்கும் புத்தகங்கள் தேர்ந்தெடுத்தல் சிறப்பு.
  • கணக்கு போன்ற தலைப்புக்கு பயிற்சி அவசியம். ஒரு தலைப்பில் எப்படி கேள்வி கேட்டாலும் பதில் கூற இயலும் என்ற அளவுக்கு பயிற்சி அவசியம்.
  • ஒரு தலைப்பை முடிக்காமல் அடுத்த தலைப்பிற்கு போகக் கூடாது.
  • அடிக்கடி தேர்வு எழுதிப்பாருங்கள். நேரத்திற்குள் உங்களால் முடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.
  • எந்த தலைப்பில் உங்களுக்கு நேரம் அதிகம் எடுக்கிறது என்று பாருங்கள். அடுத்த முறை சற்று குறைக்கப் பாருங்கள்.
  • சரியான அட்டவணை போட்டு படிக்க வேண்டும்.
  • குழுவாக படிப்போர் எனில் ஆர்வமற்றவரை சேர்த்தல் வேண்டாம். உங்களையும் சேர்த்து கெடுத்துவிடுவர்.
  • குழுவாக படிக்கும் போது பாடத்தை பிரித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு நன்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லிக்கொடுங்கள்.


  • Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

    Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.

    No comments:

    Post a Comment