டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வை வெல்ல தமிழ்பாட குறிப்புகள்!

TNPSCGK Editorial Team
0
குரூப் 2 தேர்வுக்கு பயன்படும்  மொழிப்பாடக் குறிப்புகளின் தொகுப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. Group II தேர்வுக்கு தயாராபவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். குறிப்புகளை நன்றாக படித்து நினைவில் வைத்துக்கொண்டால் TNPSC மொழிப்பாடங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மிகச்சரியான பதில்கள் அளித்து தேர்வில் வெற்றிபெறலாம்.

ஒரெழுத்து ஒரு மொழி:
தமிழ்  மொழியில் ஒரெழுத்தில் அமைந்துள்ள சொற்கள் மற்றும் பொருள்கள் செயல்களின்  தொகுப்பு கொடுத்துள்ளோம். அவற்றை நன்றாக படிக்கவும்.

ஆ-
பசு, பெற்றம் , மான், எருமை பெண்ணின் இனம், இரக்க குறிப்பு, அதிசய குறிப்பு, வினா இடைச்சொல், ஆவது முடிந்தது, இணக்காமதல், ஒப்பாதல், அமைத்தல், ஆன்மா, ஆச்சாமரம், எதிர்மறை, இடைநிலை, பலவின்பால், எதிர்மறை, வினை முற்று, விகுதி, முறை, விதம், விருத்தி.

ஈ- ஈதல், இரத்தல், படிப்பித்தல், படைத்தல், ஈணுதல், தேர்தல், அதிசய குறிப்பு, தேனீ, வண்டு, வீட்டு ஈ,  இறகு, அழிவு.

ஊ- தசை, இறைச்சி, வினையெச்ச, விகுதி,ஊண்

ஏ- பெருக்கம், அடுக்கு, மேல்நோக்கம், இறுமாப்பு, அம்பு, ஏவுதல், பிரிநிலை, வினா, எண்,  தேற்றம், ஈற்றசை, இசைநிறை, விளிக்கும் குறிப்பு, இகழ்ச்சி குறிப்பு.

ஐ- செல்லாக்க விகுதி, வேற்றுமை உருபு, முன்னிலை ஒருமை, விகுதி, சாரியை, அழகு, வியப்பு, மென்மை, நுன்மை, கோழை, தலைவன், கணவன், அரசன் ஆசான், ஆசிரியை, தந்தை, சகோதரன்

ஒ- சென்று தங்குதல், மதநீர் தாங்கும் பலகை( உயர்வு, இழிவி, மகிழ்ச்சி, இகழ்ச்சி, அழைப்பு, வியப்பு, குறிப்புகள் ,அசைநிலை, புணர்தல்,

வேர்சொல் தேர்வு செய்தல்: 
தனிக்குறிப்பு மட்டுமே வேர்சொல்லாக இருக்கும்.
பொருள் உணர்த்தும் மிகச்சிறிய குறியீடு
ஏவல் வினைமுற்று  வினையாக வரும்.
செல்கிறான்- செல்
தனிக்குறில் ஒற்று குற்றியலுகரம்
வெட்டினான்- வெட்டு
ஒட்டினான்-ஒட்டு
தட்டினான்- தட்டு

இருகுறில்:
படித்தான்- படி
கிழித்தான்- கிழி

இருகுறில் குற்றியலிகரம்:
விலகினான்- விலகு
பழகினான்- பழகு
புழுகினான்-புழுகு
ஒழுகினான்-ஒழுகு

இருகுறில் ஒற்று:
வளர்ந்தான் - வளர்
படர்ந்து- படர்
மலர்ந்தான் - மலர்
தளர்ந்தான் -தளர்

இரு குறில் குற்றியலுகரம்: 
ஒதுக்கினான்- ஒதுக்கு
உலுக்கினான்-உலுக்கு
பதுக்கினான்-பதுக்கு
குதப்பினான்-குதப்பு
செதுக்கினான்- செதுக்கு
சறுக்கினான்-சறுக்கு
வணங்கினான்- வணங்கு

நெடில் : 
போனான்- போ
வைத்தான்- வை
வந்தான்- வா
தந்தான்- தா
செத்தான்- சா
ஈந்தான்-ஈ

நெடில் குற்றியலுகரம்: 
கூறினான்-கூறு
பாடினான்-பாடு
பேசினான்- பேசு
வாடினன்- வாடு
ஆடினான்- ஆடு

நெடில் ஒற்று:
பார்த்தான் - பார்
வாழ்ந்தான்- வாழ்
பூண்டான் -பூண்

நெடில் ஒற்று குற்றியலுகரம்: 
வாட்டினான்- வாட்டு
சூட்டினான்- சூட்டு
தாக்கினான்-தாக்கு
தூற்றின்னான்- தூற்று

நெடில் ஈற்றொற்று குற்றியலுகரம்: 
வாழ்த்தினான் - வாழ்த்து
போர்த்தினான்- போர்த்து
பாய்ச்சினான்- பாய்ச்சு
காய்ச்சினான்- காய்ச்சு

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top