Sunday, February 5, 2017

காலச்சுவடுகள் 2016 | நிகழ்வுகள் | தேசியம்

தேசியம்
ஜனவரி
1. தில்லியில் சுற்றுச்சூழல் மாசுபடுதலைக் குறைக்கும் வகையில் ஒற்றை - இரட்டை முறை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி, ஒற்றை, இரட்டை எண்களின் அடிப்படையில் கார்கள் தரம் பிரிக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
2. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப் படை தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பாதுகாப்புப் படை வீரர்கள் வீர மரணமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
4. மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் (6.7 ரிக்டர்) 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள்.
17. ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமூலா (26) தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
21. வணிக வளாகக் காவலாளியை காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் கேரளத்தைச் சேர்ந்த புகையிலை தொழிலதிபர் முகமது நிஷாமுக்கு ஆயுள் தண்டனையும், கூடுதலாக 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து திருச்சூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
24. பாஜக தேசியத் தலைவராக அமித் ஷா இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

பிப்ரவரி
1. எல்லைப் பாதுகாப்பு ஆயுதப் படைப் பிரிவின் முதல் பெண் இயக்குநராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்டார்.
5. குஜராத் மாநிலம், நவுசாரி மாவட்டத்தில் உள்ள பூர்ணா ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் பலியானார்கள்.
8. இந்தியாவின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில், லஷ்கர் பயங்கரவாத அமைப்புடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு தொடர்பு வைத்திருப்பதாக அமெரிக்க சிறையில் பயங்கரவாதி டேவிட் ஹெட்லி வாக்குமூலம் அளித்தார்.
13. பாகிஸ்தானுக்கு எஃப்-17 ரக போர் ஜெட் விமானங்களை விற்பனை செய்ய ஒப்புக் கொண்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்தது.
15. நிதி முறைகேடு தொடர்பாக விஷ்வ பாரதி பல்கலைக்கழக துணைவேந்தர் சுஷந்த தத்தா குப்தாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
15. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களை சேர்க்கக் கோரி ஜாட் சமூகத்தினர் ஹரியாணாவில் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டார் படுகாயமடைந்தனர்.
19. அருணாசலப் பிரதேசத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு நடுவே, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலிக்கோ புல், மாநில முதல்வராக பதவியேற்றார்.
25 . 1993-ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார்.

மார்ச்
1 பாலியல் தொல்லை புகாரின் அடிப்படையில் "தேரி' நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆர்.கே. பச்சௌரிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தில்லி போலீஸôர் தாக்கல் செய்தனர்.
11 மக்களவையில் ஆதார் மசோதா நிறைவேற்றப்பட்டது.
14 நிதி மோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான சஜ்ஜன் புஜ்பலை அமலாக்கத் துறை கைது செய்தது.
14 ராணுவத்தினருக்கான ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.
27 உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

ஏப்ரல்
3 மத்தியப் பிரதேச மாநிலம், சத்னா மாவட்டத்தில் உள்ள மகுந்த்பூரில் வெள்ளைப் புலிகளுக்கான சரணாலயத்தை முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் திறந்து வைத்தார்.
4 உத்தரப் பிரதேசத்தில் 1991-ஆம் ஆண்டு சீக்கிய யாத்ரீகர்கள் 10 பேர் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட வழக்கில் 47 போலீஸôருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
5 மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட "2016-ஆம் ஆண்டுக்கான தர வரிசைப் பட்டியலில்', பொறியியல் பிரிவில் சென்னையைச் சேர்ந்த இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி-மெட்ராஸ்) முதலிடம் பிடித்துள்ளது.
5 பிகார் முழு மதுவிலக்கு மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளைத் தயாரிக்கவும், அவற்றை விற்பனை செய்யவும், அருந்தவும் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு தடை விதித்தது.
10 கேரள மாநிலம், கொல்லம் அருகே புற்றிங்கல் தேவி கோயிலில் நடைபெற்ற திருவிழாவில், வாண வேடிக்கையின்போது நேரிட்ட வெடி விபத்தில் சிக்கி 110 பக்தர்கள் உயிரிழந்தனர். 400 பேர் காயமடைந்தனர்.
11 எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) ரத்து செய்வதாக பிறப்பித்த முந்தைய உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
21 மகாராஷ்டிர மாநிலம், நாசிக் அருகே உள்ள திரியம்பகேஸ்வரர் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், மகளிர் அமைப்பச் சேர்ந்த 3 பெண்கள், கோயில் கருவறைக்குள் சென்று வழிபட்டனர்.

மே
1. 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி, உத்தரப் பிரதேசத்தில் தொடக்கி வைத்தார்.
10. உத்தரகண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
13. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராகப் போதிய ஆதாரமில்லை என்று தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தனது இறுதி அறிக்கையில் தெரிவித்தது.
18. குஜராத் மாநிலத்தில் 59 கரசேவகர்களின் உயிரிழப்புக்குக் காரணமான கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஃபரூக் முகமது பனாவை பயங்கரவாதத் தடுப்புப் படையினர், 14 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்தனர்.
22. இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருமான கிரண் பேடி, புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
23. ஈரானில் உள்ள சாப்ஹார் துறைமுகத்தை இந்தியாவின் நிதியுதவியுடன் மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம், இந்தியா-ஈரான் இடையே பிரமதர் மோடி, ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானி முன்னிலையில் கையழுத்தானது.

ஜூன்
2 குஜராத் கலவரத்தின்போது, ஆமதாபாத் குல்பர்க் சொசைட்டி பகுதியில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எசான் ஜாஃப்ரி உள்பட 69 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 24 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 36 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
10 தொழிலதிபர் விஜய் மல்லையா, அவருடைய "யுனைட்டெட் புரூவரிஸ்' நிறுவனம் ஆகியவற்றுக்குச் சொந்தமான ரூ.1,411 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
17 இந்திய விமானப் படையில் முதல் முறையாக போர் விமானங்களில் 3 பெண் விமானிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நியமித்தார்.
22 20 செயற்கைக்கோள்களுடன் "பிஎஸ்எல்வி-சி34' ராக்கெட்டை ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஸ்ரோ ஏவி சாதனை படைத்தது.

ஜுலை
1 இந்தியாவிலேயே முழுக்க, முழக்கத் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானமான "தேஜஸ்', விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது.
5 மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இணையமைச்சராக இருந்த பிரகாஷ் ஜாவடேகருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, இலாகா மாற்றப்பட்டு ஜவுளித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
7 கங்கையைத் தூய்மையாக்கும் திட்டம் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. மொத்தம் 7 மாநிலங்களில் 231 திட்டங்களைச் செயல்படுவதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடக்கம்.
8 ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் கட்டற்ற வன்முறை வெடித்தது.
17 அருணாசலப் பிரதேச அரசியல் சூழலில் புதிய திருப்பமாக, ஆளும் காங்கிரஸ் அரசின் புதிய முதல்வராக 37 வயது நிரம்பிய பெமா காண்டு பொறுப்பேற்றார்.
27 சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா, தனது 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார். அரசியலில் களமிறங்கப் போவதாகவும் அறிவித்தார்.

ஆகஸ்ட்
3 காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது. அதிமுக எம்.பி.க்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
4 இஸ்லாமாபாதில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவில் நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவளிப்பதாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
5 முதல்வர் ஆனந்திபென் படேல் ராஜிநாமாவைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக விஜய் ரூபானி பொறுப்பேற்றுக் கொண்டார்.
11 மகப்பேறு விடுமுறைக் காலத்தை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்த வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
15 இந்தியாவுக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 5 பயங்கரவாதிகளை காஷ்மீரின் உரி பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
20 அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது, பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடையை (கோட்) வைர வியாபாரி ஒருவர் ரூ.4.3 கோடிக்கு ஏலத்தில் வாங்கினார். இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.
29 மேற்கு வங்க மாநிலத்தை "வங்கம்' எனப் பெயர் மாற்றம் செய்வது தொடர்பான தீர்மானம் அந்த மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.


செப்டம்பர்
1 நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்தரிகை தாக்கல் செய்தது.
8 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) வரலாற்றில் முதன்முறையாக, இன்சாட்-3டி ஆர் செயற்கைக்கோளைத் தாங்கிச் சென்ற ஜிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
16 அருணாசலப் பிரதேச அரசியலில் திடீர் திருப்பமாக அந்த மாநில முதல்வர் பெமா காண்டு உள்பட 43 எம்எல்ஏ-க்கள் காங்கிரஸிலிருந்து விலகி, அருணாசல் மக்கள் கட்சியில் இணைந்தனர். பாஜகவுடன் கூட்டணி வைத்து அக்கட்சி ஆட்சி அமைத்தது.
18 ஜம்மு - காஷ்மீரின் உரி பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பல்வேறு பதில் நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்தது.
29 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அதிரடியாக நுழைந்த இந்திய ராணுவம், அங்கிருந்த பயங்கரவாத முகாம்களை வேரோடு அழித்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அக்டோபர்
8 செகந்திராபாதில் சமண மதத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியான ஆராதனா என்பவர் உணவு, குடிநீர் இன்றி 68 நாள்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததால் உயிரிழந்தார்.
14 பணி நியமன ஊழல் விவகாரத்தில் சிக்கியதால், கேரள தொழில்துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜன் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
.24 ஒடிஸாமாநிலம், மால்காங்கிரி மாவட்டத்தில் ஆந்திர போலீஸôரும், ஒடிஸாபோலீஸôரும் கூட்டாக நடத்திய என்கவுன்ட்டர் நடவடிக்கையில், 11 பெண்கள் உள்பட 24 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
24 மும்பை ஹாஜி அலி தர்காவில் பெண்கள் வழிபாடு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக, உச்ச நீதிமன்றத்தில் ஹாஜி அலி தர்கா அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
31 சிறையில் இருந்து தப்பிச் சென்ற சிமி பயங்கரவாதிகள் 8 பேர் மத்தியப் பிரதேச போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நவம்பர்
8 கருப்புப் பண புழக்கத்துக்கு முடிவு கட்டும் வகையில், இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 ஆகிய உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாதது தொடர்பான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
9 அமெரிக்க செனட் சபை உறுப்பினராக அமெரிக்க வாழ் இந்தியரான கமலா ஹாரீஸ் தேர்வு செய்யப்பட்டார்.
11 சட்லெஜ் இணைப்புக் கால்வாய் திட்ட விவகாரம் தொடர்பாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 42 பேரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர்.
20 கான்பூரில் இந்தூர்-பாட்னா இடையேயான விரைவு ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 146 பயணிகள் உயிரிழந்தனர்.
30 திரையரங்குகளில் திரைப்படம் திரையிடுவதற்கு முன்பு தேசிய கீதத்தை கட்டாயமாக ஒளிபரப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


டிசம்பர்
7 இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனம், பிஎஸ்எல்வி-சி36 விண்கலம் மூலம் 1,235 கிலோ எடை கொண்ட ரிசோர்ஸ்சாட் -2ஏ செயற்கைக்கோளை ஏவி சாதனை படைத்தது.
9 சொகுசு ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் வழக்கில், இந்திய விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி உள்ளிட்ட 3 பேரை சிபிஐ கைது செய்தது.
9 2017-ஆம் ஆண்டு நீட் தேர்வு, ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அறிக்கைத் தாக்கல் செய்தார்.
14 மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
14 கர்நாடக மாநில கலால்துறை அமைச்சராக இருந்த ஹெச்.ஒய். மெத்தி, பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதால் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
15 நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
16 சூரியஒளி மின்தகடு ஊழல் வழக்கில், சரிதா நாயர், அவரது கணவர் பிஜு ராதா கிருஷ்ணன் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரும்பாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
17 இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் விபின் ராவத் நியமிக்கப்பட்டார்.
19 ஹைதராபாத் தில்சுக்நகர் தொடர்குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளான 5 பயங்கரவாதிகளுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
22 தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் திடீர் ராஜிநாமா.

No comments:

Post a Comment