TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements

TNPSC Study Meterials and guides in Tamil. | போட்டித் தேர்வுக்குரிய சிறப்பு வலைத்தளம்.

Saturday, April 30, 2016

TNPSC, TRB, TNTET, VAO போட்டித் தேர்விற்கான குறிப்புகள் டவுன்லோட் செய்ய

போட்டித் தேர்வில் நடப்பு நிகழ்வுகள் குறித்த கேள்விகள் முக்கிய இடம் பெறுகின்றன என்பதை கருத்தில் கொண்டு 2012 ஆம் ஆண்டு முக்கிய நிகழ்வுகளை தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் பட்டாயா ஓபன் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா- ஆஸ்திரேலியாவின் அனஸ்டசியா ஜோடி வென்று சாம்பியன் ஆனது. (பிப்ரவரி 12)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். (பிப்ரவரி 16)

ஆன்டிரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்த முறைகேடு பிரச்சினையால் செயற்கைக்கோள் திட்டப் பணிகளில் எந்தப் பாதிப்பும் இல்லை. தற்போது பணிகள் வழக்கம் போல் நடக்கின்றன என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார். (பிப்ரவரி 12)

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் இருபத்து நான்கரை லட்சம் கோடி என்றும், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவதில் இந்தியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர் என்றும் சி.பி.ஐ. இயக்குநர் அமர்பிரதாப் சிங் தெரிவித்தார். (பிப்ரவரி 13)

தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறிய விவகாரத்தில் தேர்தல் கமிஷனிடம் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் கடிதம் மூலம் வருத்தம் தெரிவித்தார். (பிப்ரவரி 14)

 கேரள மாநிலம் கொல்லம் அருகே மீனவர்களின் படகின் மீது இத்தாலி கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டதில் தமிழக மீனவர்கள் 2 பேர் பலியானார்கள். தப்பிச் செல்ல முயன்ற கப்பலை கடலோரக் காவல் படையினர் சுற்றி வளைத்தனர். (பிப்ரவரி 15)

கல்லூரி மாணவர்களை `பஸ் தினம்' கொண்டாட அனுமதித்தால் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ், கல்வி அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது. (பிப்ரவரி 15)

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை குறித்து ஆய்வு செய்துவரும் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழு, இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் 2 மாத கால அவகாசம் கேட்க முடிவு செய்தது. (பிப்ரவரி 15)

ஹோண்டுராஸ் நாட்டில் ஜெயிலுக்குள் ஏற்பட்ட தீ விபத்தில் கைதிகள் 357 பேர் உயிரோடு கருகி இறந்தனர். (பிப்ரவரி 15)

TNPSC போட்டித்தேர்வில் பொதுத்தமிழில் கேட்கப்படும்
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
பிழை நீக்கி எழுதுதல்
வல்லினம் மிகும் இடங்கள்
வல்லினம் மிகா இடங்கள்
சந்திப்பிழை திருத்தி எழுதுதல்
மரபுப்பிழை நீக்கி எழுதுதல்
வழூஉச் சொல் நீக்கி எழுதுதல்
வேற்றுமொழிச் சொல் நீக்கி எழுதுதல்
ஒருமை பன்மை தவறை நீக்கி எழுதுதல்
பறவை மற்றும் விலங்களின் - ஒலி குறிப்பு சொற்கள்
வழூஉச் சொற்களும் தமிழ்ச்சொற்களும்
வாக்கிய வகை அறிதல்
எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல்
எதிர்ச்சொல் கண்டறிதல்
பிரித்தெழுதுதல்
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

சென்ற ஆண்டு நடந்த குரூப் 4 ல் கேட்கப்பட்ட வினாக்கள், விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு, உவமையால் விளக்கப்பெறும் பொருள், புகழ்பெற்ற நூல்கள், நூலாசிரியர்கள, இலக்கண குறிப்பறிதல், ஓரெழுத்து ஒரு மொழி ஆகிய தலைப்புகளின் கீழ் 38 பக்கங்கள் கொண்ட TNPSC போட்டித்தேர்விற்கான பொதுத்தமிழ் பாடக்குறிப்புகளை இங்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.No comments:

Post a Comment