Friday, January 15, 2016

குரூப்-2 தேர்வுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாமா?

குரூப்-2 தேர்வுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாமா? என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரி விளக்கம் அளித்தார்.

துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், உதவி தொழி லாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பல்வேறு விதமான பணிகளில் 1,241 காலியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

குரூப்-2 தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பணிகளுக்கு தக்கவாறு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், குரூப்-2 தேர்வுக்கு தாங்கள் விண்ணப்பிக்கலாமா என்ற சந்தேகம் பிஇ, பிடெக் பட்டதாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

குரூப்-2 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், துணை வணிக வரி அதிகாரி, சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை நிதி உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பணிகளுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்க இயலாது.

ஆனால், சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் போன்ற பதவிகளுக்கு அவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

எந்தெந்தப் பணிகளுக்கு எந்தெந்த பட்டதாரிகள் விண்ணப் பிக்கலாம்? என்ற விவரம் தேர்வு அறிவிக்கையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியைப் பொருத்தவரையில், தேர்வுக்கான அறிவிப்பு வெளியான நாளில் குறைந்த பட்ச கல்வித்தகுதியைப் பெற்றி ருக்க வேண்டும்.

தற்போது இறுதி ஆண்டு படித்துக் கொண் டிருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

துணை வணிக வரி அதிகாரி, சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை நிதி உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலாது.

No comments:

Post a Comment