Saturday, December 19, 2015

TNPSC VAO தேர்வில் வெற்றிப்பெற டிப்ஸ்-2015

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களை, தேர்வு செய்வதற்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சமீபத்தில் வெளியிட்டது. இதில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தேர்வு முறையை டி.என்.பி.எஸ்.சி., மாற்றி அமைத்துள்ளது.

வரும் பிப் .16 ல்   குரூப்  1  தேர்வுகளும் ,  தொடர்ந்து   பல்வேறு தேர்வுகளும்   நடக்க   உள்ளன .  குரூப்  1  தேர்வு ,  இனி   மாநில குடிமைப்பணி   என   அழைக்கப்படும் .  குரூப்  1  முதன்மை   தேர்வில் தற்போது   நான்கு   தாள்கள்   கொண்டு   வரப்பட்டுள்ளன .  குரூப்  2 தேர்வி லிருந்த   நகராட்சி   ஆணையர் ,  சார்பதிவாளர்   போன்ற   பணிகள் , குரூப்  1 தேர்வு க்கு   மாற்றப்பட்டுள்ளன .

குரூப்  2 தேர்வி ல்   இருக்கும்   வருவாய்   ஆய்வாளர்   உள்ளிட்ட   பணிகள் , இதுவரை   முதனிலைத்   தேர்வு ,  நேர்முகத்   தேர்வு   வாயிலாக   நிரப்பப்பட்டன .  இப்பணிகள்   இனி   முதனிலைத் தேர்வு ,  முதன்மைத்   தேர்வு   மற்றும்   நேர்முகத்   தேர்வு   ஆகிய   கட்டங்களில்   நிரப்பப்படும் . ( முதனிலைத் தேர்வு   கொள்குறி   வகையிலும் ,  முதன்மைத்   தேர்வு   விரிவாக   விடையளிக்கும்   வகையிலும்   அமையும் )

வி . ஏ . ஓ .,  தேர்வுகளில்   இனி   கிராம   நிர்வாகம் ,  உள்ளாட்சித்   துறை   சார்ந்த   வினாக்கள்   இடம்   பெறும் .  குரூப்  4 தேர்வுத்   திட்டத்தில்   மாற்றம்   இல்லை .  ஒட்டு   மொத்தமாக   எல்லா   தேர்வுகளிலும் ,  மனத்திறன்   சம்பந்தப்பட்ட " ஆப்டிடியூட் &'  வகை   வினாக்கள்  ( புதிதாக ),  கட்டாயம்   இடம்   பெறும் .

தயாராவது   எப்படி ?:  கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் "சி-சாட்" என்ற தாள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.  டி.என்.பி.எஸ்.சி.,யும் இந்த தாளை சேர்த்திருக்கிறது.

பல ஆண்டுகளாக தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்கள், புதிதாக இப்பகுதியை படிக்க வேண்டும். முதன்முதலாக தேர்வு எழுதுவோர், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். பொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதார பாடங்களே போதும்.




தேர்வுகளில்   தத்துவ இயல் ,  மனத்திறன்   தொடர்பான   கணிதக்   கேள்விகள்   கேட்கப்படுகின்றன .  இப்பகுதிக்கு ஆழமாக   படிக்க   வேண்டியதில்லை .  சந்தையில்   கிடைக்கும்   வழிகாட்டி   நூல்களை   புரட்டினாலே   போதும் .

நடப்பு   நிகழ்வுகள்   குறித்த   வினாக்களுக்கு ,  முக்கியத்துவம்   தரப்படும்   என   தேர்வாணையம்   அறிவித்துள்ளது . இதற்கு   விடையளிக்க ,  தினமும்   செய்தித்தாள்களைப்   படித்து ,  குறிப்பு   எடுக்க   வேண்டும் .  முக்கிய   செய்தி , சிறப்பு   கட்டுரை ,  தலையங்கம்   ஆகியவற்றை   சேகரித்து   வைக்க   வேண்டும் .

இந்திய   அரசியலமைப்பு   மற்றும்   ஐந்தாண்டுத்   திட்டங்களில் ,  குறைந்தது  5  கேள்விகள்   தவறாமல்   இடம் பெறும் .  முக்கிய   அரசியலமைப்பு   சட்டத்   திருத்தங்கள் ,  பிரிவுகள்   ஆகியவை   பற்றிய   பட்டியலை   சொந்தமாக தயார்   செய்து   வைத்து   கொள்ளலாம் .

அறிவியல்   பாடங்களைப்   படிக்கும்   போது ,  அதன்   நடைமுறை ,  பயன்பாடுகளை   தெரிந்து   கொள்ள   வேண்டும் . கம்ப்யூட்டர்   சயின்சில்   அடிப்படையாக  2  கேள்விகள்   இருக்கும் .  இதற்கு   கம்ப்யூட்டர்   குறித்த ,  இயல்பான அறிவே   போதும் .

மொழிப்   பாடம்   விருப்பப்   பாடமாக   தமிழை   தேர்வு   செய்வதா ,  ஆங்கிலமா   என்ற   குழப்பம்   காணப்படுகிறது . ஆரம்பம்   முதல்   ஆங்கிலத்தில்   படித்து ,  புலமை   பெற்றவர்கள்   ஆங்கிலத்தை   தேர்ந்தெடுக்கலாம் .  மற்றவர்கள் தமிழை   தேர்வு   செய்தல்   நலம் .

பாடவாரியாக   அட்டவணை   தயார்   செய்ய   வேண்டும் .  தேர்வுக்கு   முன்   குறைந்தபட்சம் , 10  மாதிரி தேர்வுகளை   எழுத   வேண்டும் .  பழைய   வினாத்தாள் ,  டி . என் . பி . எஸ் . சி .,  இணையதளத்திலேயே கிடைக்கின்றன . " சி - சாட்"   வினாக்களை   பொறுத்த   வரை ,  சொந்தமாக   படிக்க   முடியாது   என்பதால் ,  பயிற்சி மையத்தில்   படிக்கலாம் .

இந்து   அறநிலையத்துறை   சார்ந்த   பணிகளுக்கான   தேர்வுக்கு ,  சைவமும்   வைணவமும் ,  இந்து   சமய இணைப்பு   விளக்கம்   போன்ற   நூல்களை   தேர்வு   ஆணையமே   பரித்துரைத்திருக்கிறது .  இப்புத்தகங்கள்   பெரிய கோயில்களில்   கிடைக்கின்றன .

ஒரு   தேர்வில்   வெற்றி   பெற்றுவிட்டால் ,  படிப்பதை   நிறுத்தி   விடாதீர்கள் .  பணியில்   சேரும்   வரை   என்ன வேண்டுமானாலும்   நிகழலாம் .  கடின   உழைப்புக்கு   நிச்சயம்   பலன்   உண்டு .  வெற்றி   பெற   வாழ்த்துகள்.

நன்றி: தினமலர்.

No comments:

Post a Comment