logo blog

ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்



டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வில் ஆங்கிலச் சொற்களைக் கொடுத்து அதற்கு இணையான தமிழ் சொல்லை தேர்ந்தெடுக்க கேள்விகள் கேட்கப்படும். அதற்கு பயன்படும் வகையில் இப்பதிவில் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் அதற்கு இணையான தமிழ்ச் சொற்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. படித்துப் பயன்பெறுங்கள்.


ஆங்கிலச் சொற்கள் தமிழ் சொற்கள்
Accident நேர்ச்சி
Acknowledgement Card ஒப்புகை அட்டை
Admission சேர்க்கை
Agency முகவாண்மை
Agent முகவர்
Allergy ஒவ்வாமை
Assurance காப்பீடு
 Attendance Register வருகைப் பதிவேடு
Attestation சான்றொப்பம்
Automobile தானியங்கி
Bench விசிப்பலகை
Binding கட்டமைப்பு
Bona fide certificate ஆளறி சான்றிதழ்
Central Government நடுவண் அரசு
chalk piece சுண்ணக்கட்டி
Champion வாகை சூடி
Company குழுமம்
Compounder மருந்தாளுநர்
Deposit இட்டு வைப்பு
Document ஆவணம்
E-Mail மின்னஞ்சல்
Ever silver நிலைவெள்ளி
Fax  தொலை நகலி
Fiction புனைக்கதை
Insurance ஈட்டுறுதி
Interview நேர்காணல்
Irregular ஒழுங்கற்ற
Key திறவுகோல்
Keyboard விசைப்பலகை
Laptop மடிக்கணினி
License உரிமம்
Lift  மின்தூக்கி
Lorry சரக்குந்து
Mammal பாலூட்டி
Missile ஏவுகணை
Mortuary பிணக்கிடங்கு
Passport கடவுச்சீட்டு
Password கடவுச் சொல்
Permanent நிரந்தரம்
Photo Graph நிழற்படம்
Photocopy (Xerox) ஒளிப்படி
Planet கோள்
Plastic நெகிழி
Print out அச்சுப் படி
Probationary Period தகுதிகாண் பருவம்
Proposal கருத்துரு
Receiver அலை வாங்கி
Remote Sensing தொலை உணர்தல்
Research Centre ஆராய்ச்சி நிலையம்
Search Engine தேடுபொறி
Tea  Stall தேனீர் அங்காடி
Technical தொழில்நுட்பம்
Tele Print தொலை அச்சு
Telex தொலை வரி
Temporary தற்காலிகம்
Traitor துரோகி
Ultra Sound Scanning மீயொலி வரிக் கண்ணோட்டம்
Visa நுழைவு இசைவு
Visiting card காண்புச்சீட்டு


Share this